போளூர் அருகே விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்த ஆட்சியர்

திருவண்ணாமலை, மே 16:

திருவண்ணாமலை மாவட்டம் படவேடு செண்பகத்தோப்பு
அணையில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ஆட்சியர் பிரசாந்த் வடநேரே
ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு முடிந்தவுடன் அங்கிருந்து
அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அங்கிருந்து
புறப்பட்டு சென்றனர் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே மாலை 6.30 மணியளவில்
தனது காரில திருவண்ணாமலைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது போளூர்
அடுத்த முருகாபாடி வந்தபோது வழியில் 2 இளைஞர்கள் பைக் விபத்துக்குள்ளாகி
ரத்த காயங்களுடன் கிடப்பதை கண்டார் காரை நிறுத்தி விசாரித்தார் அவர்கள்
செங்குளம் அடுத்த கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் கோபி (17),
ஏழுமலை மகன் பார்த்திபன் (15) அவர்கள் வந்த பைக் விபத்துக்குள்ளானதும்
தெரியவந்தது. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு ஆட்சியர் தகவல்
தெரிவித்தார். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் 2 இளைஞர்களையும் ஆட்சியர்
தனது காரிலேயே போளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிரி
சிகிச்சை பிரிவில் அனுமதித்தார். சிகிச்சை அளிக்கும் வரை அங்கேயே இருந்த
ஆட்சியர் மருத்துவரகளிடம் கேட்டார் 2 பேருக்கும் ஆபத்து இல்லை என
மருத்துவர்கள் தெரிவித்தனர் என்றாலும் அவர்களை மேல்சிகிச்சைக்காக
திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்குமாறு
கூறிவிட்டு ஒரு மணிநேரத்திற்கு பிறகு ஆட்சியர் புறப்பட்டு சென்றார்.
ஆட்சியரின் இந்த மனிதநேயம் அங்கிருந்த பொதுமக்களை நெகிழ்வடைய செய்தது.
என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author