மகளிர் ஆசிய கோப்பை டி 20: சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

டி 20 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி, 17 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மகளிர் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆசிய கோப்பைக்கான டி 20 கிரிக்கெட் போட்டிகள், பாங்காக் நகரில் நடைபெற்றது. இதில் இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் மகளிர் அணியை எதிர்த்து ஆடியது. 20 ஓவர்களின் இறுதியில் 5 விக்கெட் இழப்புக்கு இந்தியாவால் 121 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.

வெற்றிபெற 122 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் பாகிஸ்தான் அணி ஆட வந்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 104 ரன்களை மட்டுமே எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோற்றது. இதைத்தொடர்ந்து இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்திய வீராங்கனையான மிதாலி ராஜ், ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகி விருதுகளைப் பெற்றார்.

You might also like More from author