மத்தியப்பிரதேசத்தில் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை!

மத்தியப்பிரதேசத்தில், மாடுகளைப் பாதுகாப்பதற்காக பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில், மாடுகளைக் காப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அங்கு, பிளாஸ்டிக், பாலித்தீன் பைகளுக்குத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் மே 1-ம் தேதி முதல் அந்த மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள் தடைக்கான உத்தரவு அமலுக்கு வருகிறது. ஏற்கெனவே, சுற்றுலா மற்றும் புனிதத் தலங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த, கடந்த ஜனவரி மாதம் முதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தடை உத்தரவு அமலுக்கு வந்த பிறகு, அவற்றைப் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என  மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

You might also like More from author