மத்திய பேருந்து நிலையத்தில் முதியவர் பலி

திருவண்ணாமலை, மே 18:

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் வெயில்
கொடுமை தாங்காமல், முதியவர் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயரிழந்தார்.
திருவண்ணாமலையில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு தற்போது வெயிலின் தாக்கம்
அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக 108 டிகிரிக்கு மேலாக வெயில்
சுட்டெரித்து வருகிறது. நேற்று 109.4 டிகிரி வெயில் பதிவானது. வெயிலின்
தாக்கம் அதிகாக உள்ளதால் இரவில் கடும் புழுக்கம் உள்ளது இந்நிலையில்
நேற்று திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்துக்கு பேருந்து ஏற வந்த
சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் வெயில் கொடுமையால் சென்னை
செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் திடீரென சுருண்டு விழுந்து
உயிரிழந்தார் இவர் யார் எந்த ஊரைச் சேரந்தவர் என தெரியவில்லை. தகவல்
அறிந்த திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு
விரைந்து வந்து முதியவரின சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக
திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து முதியவர் குறித்து விசாரித்து
வருகின்றனர்

You might also like More from author