Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news மனம் திறந்தார் சசிகலா நடந்த எல்லா பிறச்சனைக்கும் இவர் தான் காரணமாம் - Naangamthoon

மனம் திறந்தார் சசிகலா நடந்த எல்லா பிறச்சனைக்கும் இவர் தான் காரணமாம்

தனது குடும்பம் பல வித பிரச்சனைகளில் மாட்டி கொண்டு முழிப்பதற்கு தனது கணவர் நடராஜன் தான் காரணம் என சசிகலா தனது வழக்கறிஞரிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக-வின் பொதுச் செயலாளர் சசிகலாவை அரசியலுக்கு கொண்டு வந்ததில் அவர் கணவர் நடராஜனின் பங்கு அதிகம்.

ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட போது, இனி நாங்கள் தான் அதிமுக-வுக்கு எல்லாம் என நடராஜன் பேட்டியளித்தார்.

தொடர்ந்து அரசையும், கட்சியையும் கட்டுக்குள் கொண்டுவர முயன்றதால் டெல்லி தலைமை பல்வேறு திட்டங்களை தீட்டி சசிகலா கோஷ்டியை ஓரங்கட்டியுள்ளது.

இந்நிலையில் பெங்களூர் சிறையில் தன்னை சந்தித்த வழக்கறிஞரிடம் இதுகுறித்து பேசிய சசிகலா, என் கணவர் நடராஜன் நடவடிக்கையால் தான் நாம் பலவீனமடைந்தோம்.

என்னிடம் ஆலோசனை பெறாமல் ஆர்.கே நகரில் தினகரன் வேட்பாளராக ஆனதால் தான் கைது வரை பிரச்சனை சென்றது என கூறினாராம்.

மேலும், நாம் தற்போது தினகரனுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என கூறிய சசிகலா, தினகரன் கைதுக்கு எதிராக நமது ஜாதியில் இருந்து எத்தனை எம்.எல்.ஏக்கள் வந்தார்கள் என வழக்கறிஞரிடம் கேட்டுள்ளார்.

மன்னார்குடி குடும்பத்தை அழிக்க நினைக்கிறார்கள் எனவும் அதற்கு எதிராக நாம் தொடர்ந்து போராட வேண்டும் எனவும் சசிகலா கூறியதாகவும் தெரியவந்துள்ளது

You might also like More from author