Home தமிழகம் மருத்துவ முதுகலை படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

மருத்துவ முதுகலை படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

16

திருவண்ணாமலை, ஏப். 20:

மருத்துவ முதுகலை படிப்பில் 50சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி திருவண்ணாமலை ஆட்சியரகத்தில் அரசு மருத்துவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனார்கள்.

அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்க செயலாளர் டாக்டர் ஸ்ரீதரன் முன்னிலை வகித்தார். பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவந்த அரசு மருத்துவர்கள்  முதுகலை படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரியும், கிராமப்புற மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிவரும் டாக்டர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு மதிப்பெண் ரத்து செய்ததை கண்டித்தும் 200க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

கோரிக்கைககளை அமுல்படுத்தாவிட்டால் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ள புறநோயாளிகள் பிரிவினை படிப்படியாக புறக்கணிப்போம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.