Mar 21, 2017
16 Views
0 0

மானை வேட்டையாடி சமைத்த 2 பேருக்கு ரூ. 90 ஆயிரம் அபராதம்

Written by
banner

திருவண்ணாமலை, மார். 21:

திருவண்ணாமலை அருகே உள்ள தானிப்பாடி வன அலுவலர்
ஜெயக்குமார், வனவர்கள் முருகன், சம்பத், முனுசாமி, வனக்காப்பாளர் குமார்
ஆகியோர் பீமாரப்பட்டி பீட் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் புகை வரும் பகுதிக்கு சென்றனர். அங்கு 2 பேர் மானை
வேட்டையாடி சமைத்துக் கொண்டிருந்தனர். அவர்களைபிடித்து விசாரித்ததில்
ஆத்திப்பாடி ஊராட்சி சந்தோஷ்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (35) பழனி
(55) என்பது தெரியவந்தது. இவர்களிடம் வேட்டையாட அனுமதியின்றி நாட்டு
துப்பாக்கியும் வெடிமருந்து, மான் தோல் மற்றும் அவர்கள் சமைத்துக்
கொண்டிருந்த மான்கறி, பாத்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும்
அவர்களுக்கு தலா ரூ. 45 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 90 ஆயிரம் அபராதம்
விதித்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *