Apr 21, 2017
2 Views
0 0

மாவட்டம் விட்டு மாவட்டம் தடையின்றி மணல் வியாபாரம்

Written by
banner

திருவண்ணாமலை, ஏப் 21:

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுக்காவில் மாவட்டம் விட்டு மாவட்டம் அதிகாரிகளின் தடையின்றி வெகுஜோராக மணல் வியாபாரம் நடக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுக்கா முழுவதும் தினசரி பல கிராமங்களில் பல நாட்களாக குடிநீர் வரவில்லை என மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல் மற்றும் அதிகாரிகளை முற்றுகை என நடக்கிறது. அதிகாரிகளும் தங்களால் இயன்ற வரை குடிநீர் பிரச்சனைகளை சமாளித்து வருகின்றனர். இதற்கு காரணம் பல் வேறு காரணங்களுக்காக மரங்களை வெட்டியதாலும், மழை காலங்களில் மழை நீர் தேக்கி வைக்க நாம் நடவடிக்கை எடுக்காததாலும், சரியான நேரத்தில் பருவ மழை பொய்பதாலும் நிலத்தடி நீர் கறைந்து குடிநீருக்கு நாம் இப்போது அலைகின்றோம். இது ஒருபுறம் இருக்க ஆற்று மணலை அரசியல் பலம், பணபலம் மற்றும் படை பலம் உள்ளவர்கள் திருட்டுத்தனமாக  சுரண்டி சுரண்டி ஆற்றில் தண்ணீர் தேங்கவிடாமல் செய்கின்றனர். இதனடிப்படையில் தண்டராம்பட்டு  தாலுக்காவின் எல்லையான வாழவச்சனூரில் ஓடுகின்ற தென்பெண்ணை ஆற்றின் இக்கரையிலிருந்து மணல் சுரண்டபட்டு விழுப்புரம் மாவட்டத்தின் ஆரம்பமான மூங்கில்துறைப்பட்டின் கரையிலில் உள்ள மாட்டு வண்டி மற்றும் லாரிகளில் கொள்ளை போகின்றன. இந்த கொள்ளை யாருக்கும் தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. தினசரி நூற்றுக் கணக்கில் திருடப்படும் மணலுக்கு சம்மந்தப்பட்ட துறைகளுக்கு மாமூல் தடையின்றி சப்ளை ஆவதால் மணல் கொள்ளையும் தடையின்றி நடக்கிறது. அதிகாரிகள் கண்,காது,வாய் ஆகியவற்றை மூடியருக்கும் வரை மணல் கொள்ளை தொடரும். நிலத்தடி நீரும் அதலபாதாலத்திற்கு செல்லும் என மக்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com