மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பு 2 பெண்கள் தற்கொலை முயற்சி

திருவண்ணாமலை, மார். 7:

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில்
திங்கள்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர்
பிரசாந்த் வடநேரே தலைமையில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட வருவாய்
அலுவலர் சா.பழனி, சமுக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜோதி, ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (பொது) குணசேகரன், உள்பட அனைத் துறை அரசு அலுவலலர்கள்
கலந்து கொண்டனர் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்
திறனாளிகளுக்கான உபகரணங்கள், சுயதொழில் கடனுதவி, வேலைவாய்ப்பு புதிய
குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 690க்கும்
மேற்பட்ட பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மனு அளிளத்தனர்.
மனுக்களை பெற்ற ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கும்ப சம்பந்தப்பட்ட துறை
அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தாட்கோ மூலம் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டத்தின் கீழ் 11
பயனாளிகளுக்கு ரூ.2.20 இலட்சம் மானியத்துடன், மளிகை கடை, கறவை மாடு,
ஃபேன்ஸி ஸ்டோர், கட்பீஸ் கடை ஆகிய தொழில் செய்வதற்கு கடனுதவிகளை மாவட்ட
ஆட்சியர் வழங்கினார்.
இந்நிலையில் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட புளியங்குளம்
கிராமததைச் சேர்ந்த ஜெயந்தி ரத்தினம் தம்பதியினர் தனது கைக்குழந்தையுடன்
வந்து திடீரென மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார் அப்போது அங்கிருந்த
போலீசார் இதனை தடுத்து விசாரித்தனர் அதில் எங்கள் கிராமத்தில் தங்களுக்கு
சொந்தமான 1.14 செண்ட் நிலம் உள்ளது. நிலம் அருகில் கழிவுநீர் குட்டை
புறம்போக்கு இடமும் உள்ளது. அந்த குட்டை ஓரம்தான் நாங்களும் பிற
விவசாயிகளும் செல்வது வழக்கம். எங்கள் வீட்டிற்கும் செல்ல அந்த வழிதான்
உள்ளது. அந்த அரசு புறம்போக்கு பாதை இடத்தை ராஜேந்திரன் குடும்பத்தினர்
ஆக்கிரமித்துள்ளனர். இதனால் எங்கள் நிலத்திற்கு சென்று வர வேறு பாதை
வழியில்லை இந்த பொது பாதை வழியாகத்தான் செல்ல வேண்டும் என வலியுறுத்தி
பலமுறை தண்டராம்பட்டு தாசில்தார், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பலமுறை மனு
அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவிலலை. இதனால் எங்களுக்கு
மனஉளைச்சலுக்கு ஆளாகியுளதோடு தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கும் நாங்கள்
தள்ளப்பட்டுள்ளோம். என்றனர்.
இதேபோல திருவண்ணாமலை அருகே உள்ள முத்தாம்பூண்டி கிராமத்தைச்  சேர்ந்த
மு.பஞ்சவர்ணம் கடந்த 6 மாதமாக 100 நாள் வேலைக்கான கூலி வழங்கப்படவில்லை
என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணை கேனுடன் வந்து தீக்குளிக்க
முயற்சித்தார். தற்கொலைக்கு முயற்சித்த புளியங்குளம் ஜெயந்தி ரத்தனம்,
முத்தாம்பூண்டி பஞ்சவர்ணம் ஆகியோர் திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலைய
போலீஸார் கைது செய்தனர்.

You might also like More from author