Home தமிழகம் மினி வேனில் விறகு சரிந்தது வியாபாரி பலி

மினி வேனில் விறகு சரிந்தது வியாபாரி பலி

11

திருவண்ணாமலை, மார். 17:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள
ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதிரன் (40), விறகு கரி வியாபாரம்
செய்து வந்தார்.இவர் நேற்று ஆக்கூர் பகுதியில் சீமை கருவேல மரங்களை
வெட்டி மினிவேனில் ஏற்றிக்கொண்டு கிராமத்தில் உள்ள சூளைக்கு சென்றார்.
ஏரிக்கரை மீது சென்றபோது மேடு பள்ளமாக இருந்ததால் மினிவேனில் இருந்து
இறங்கிய தாமோதரன் நடந்து சென்றார். அப்போது எதிர்பாராமல் மினிவேனில்
இருந்த விறகு கட்டைகள் சரிந்து அவர் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த
அவரை பொதுமக்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிசசைக்காக
கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து
தாமோதரனின் மகன் திருஞானம தூசி காவல்நிலையததில் புகார் செய்தார்
அதன்பேரில் உதவி ஆய்வாளர் ஆசைதம்பி வழக்குபதிவு செய்து தலைமறைவான ஆக்கூரை
சேர்ந்த மினிவேன் டிரைவர் நாராயணன் (40) என்பவரை தேடி வருகிறார்.