முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான போட்டோ மற்றும் வீடியோ உள்ளது

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான போட்டோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் இருப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருக்கிறது என்று தேவையில்லாத சர்ச்சையை சிலர் கிளப்பி விடுகிறார்கள்.

ஜெயலலிதா மருத்துவமனையில இருந்த போது தினமும் என்ன நடந்தது என்பது தொடர்பான வீடியோவையும் நாங்கள் எடுத்திருக்கிறோம்.

மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று ஜெயலலிதாவிடம் கேட்டதாகவும், ஆனால் அதற்கு ஜெயலலிதா தற்போது உள்ள சூழ்நிலையில் தன்னுடைய இந்த நிலைமையை பொதுமக்கள் பார்த்தால், ஜெயலலிதா இப்படி ஆகிவிட்டாரே என்று எண்ணுவார்கள், அதனால் தான் நல்ல உடல் நிலை தேறி வந்த பிறகு எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த போது புகைப்படம், வீடியோ எல்லாம் எடுத்து வைத்திருப்பதாகவும், அவசியம் தேவைப்பட்டால் அதைப்போட்டு காட்டுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

மேலும் கண்ணாடி வழியாகத் தான் பார்த்தேன் என ஆளுநரும், சிசிடிவி கமெரா இல்லை, புகைப்படம் எடுக்கவில்லை என அப்பல்லோ சேர்மனும் சொல்லி வரும் நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like More from author