முதல்வர் ஜெயலலிதா சடலமாகத் தான் கொண்டு வரப்பட்டார் டாக்டர் சீதா இன்று அதிரடியாக கைது

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை குறித்து கருத்து தெரிவித்த டாக்டர் சீதா இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 22ம் திகதி ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போதே நாடித்துடிப்பு இல்லாமல் இருந்ததாகவும், சடலமாகத் தான் கொண்டு வரப்பட்டார் எனவும் கூறியவர் டாக்டர் சீதா.

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு, வேறு யாரையும் அனுமதிக்கவில்லை, மருத்துவர்களைக் கூட பார்க்க அனுமதிக்கவில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் விசாரணை கமிஷனிடம் அனைத்து தகவல்களையும் கூறத்தயார் என்றும், ஜெயலலிதா மரணத்தினால் தான் பணியிலிருந்து விலகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் அப்பல்லோ நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் பொலிசார் சீதாவை இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.

You might also like More from author