முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலிய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலிய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆக்லண்டில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் முடிவில் 286 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகப்ட்சமாக ப்ரூம் 73 ரன்களும், குப்தில் 61 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்டோயினிஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் தடுமாறியது. ஸ்டோயினிஸ் 146 ரன்கள் எடுத்து ஒருபுறம் இலக்கை துரத்தினாலும் மறுமுனையில் உள்ள வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 46.6 ஓவர்கள் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் போராடி நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. ஆட்டநாயகனாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டோயினிஸ் தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 2 ஆம் தேதி நேப்பியரில் நடைபெறுகிறது.

You might also like More from author