முதல் மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்தவர் கைது

திருவண்ணாமலை, ஏப் 25:

திருவண்ணாமலை அருகே உள்ள காட்டு  வேளானந்தல்
புதூர் கிராமத்தைச் சேந்தவர் சேட்டு (34) தொழிலாளி இவரது மனைவி சரளா (31)
இவர்களுக்கு திருமணமாகி வேண்டா (15) , ஜெயபாரதி (10), என இரண்டு மகள்கள்
வெங்கடேஷ் (12) என்ற மகன் உள்ளனர். சேட்டு அதே பகுதியில் செங்கல்சூளையில்
வேலைபார்த்தபோது அங்கு உடன் வேலை பார்த்த அஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த கவிதா
(18) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சந்தித்து
பேசிவந்துள்ளனர். இதையறிந்த சரளா தனது கணவரை தட்டிக்கேட்டுள்ளார். இதனால்
அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு
முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற சேட்டு மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த சரளா பல இடங்களில் தேடியபோது சேட்டு கடந்த 18ந் தேதி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கவிதாவை 2வது திருமணம் செய்து
கொண்டதும் இதற்கு கவிதாவின் பெற்றோர் சண்முகம், மலர் உடந்தையாக
இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர்
காவல்நிலையத்தில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு
பதிவு செய்து சேட்டுவை கைது செய்தனர்.

You might also like More from author