Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news முன்னாள் படைவீரர் குறைதீர்வு கூட்டம் 30ந் தேதி நடக்கிறது - Naangamthoon

முன்னாள் படைவீரர் குறைதீர்வு கூட்டம் 30ந் தேதி நடக்கிறது

திருவண்ணாமலை மார்ச் 24:

திருவண்ணாமலையில் வருகிற 30ந் தேதி முன்னாள்
படைவீரர் சிறப்பு குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடக்கிறது
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் வருகிற 30ந் தேதி (வியாழக்கிழமை)
காலை 10 மணியளவில் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள்
கூட்டமும் அதனைத் தொடர்ந்து முன்னாள்படைவீரர்களுக்கானதொழில் முனைவோர்
கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது. கூட்டத்திற்கு ஆட்சியர் பிரசாந்த் வடநேரே
தலலமை தாங்கி பேசுகிறார். மற்றும் முன்னாள் படைவீரர் வாரிய உபதலைவர்,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் உள்பட பலர்
கலந்துகொண்டு முன்னாள் படைவீரர்களுக்கான சுயவேலைவாய்ப்பு, கடனுதவி
திட்டங்கள், மறு வேலைவாய்பபு பயிற்சிகள் குறித்து பேசுகிறார்கள்.
இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் முன்னாள் படைவீரர்களை சார்ந்த
விதவையர்கள் பெருமளவில் கலந்துகொண்டு பயனடையுமாறு ஆட்சியர் பிரசாந்த்
மு.வடநேரே கேட்டுக் கொண்டுள்ளார்.

You might also like More from author