மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை திமுக சார்பில் இரத்ததான முகாம் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., தொடங்கி வைக்கிறார்

திருவண்ணாமலை, மார். 12:

மு.க.ஸ்டாலின் பிறந்த நாளைமுன்னிட்டு இளைஞர்
எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையட்டி திருவண்ணாமலையில் திமுக
சார்பில் இரத்ததான முகாமினை முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ.,
இரத்ததான முகாமை தொடங்கி வைக்கிறார்.
இது குறித்து திருவண்ணாமலை நகர திமுக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான, வருங்காலத்
தமிழகம் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் 65வது பிறந்த நாளாம், இளைஞர்
எழுச்சி நாளை முன்னிட்டு திருவண்ணாமலை நகர திமுக சார்பில் இரத்ததான
முகாம் நடைபெறவுள்ளது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) 12ந் தேதி காலை 9 மணிக்கு திருவண்ணாமலை,
திருக்கோவிலூர் ரோடு, சாரோனிலுள்ள, மாவட்ட திமுக அலுவலகத்தில் இளைஞர்
எழுச்சி நாள் இரத்ததான முகாம் நடைபெறுகிறது.
இரத்ததான முகாமை முன்னாள் அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்ட குழு
உறுப்பினருமான எ.வ.வேலு, எம்.எல்.ஏ., தொடங்கி வைத்து நினைவு பரிசு
மற்றும் சான்றுகளை வழங்குகிறார்.
இந்த முகாமில் நகர கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், இளைஞர் அணி,
மாணவர் அணி, தொண்டர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி, அமைப்பு சாரா அணி,
வழக்கறிஞர் அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, பொறியாளர் அணி,
மகளிர் தொண்டர் அணி, இலக்கிய அணி, நெசவாளர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு,
கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை அணி, வர்த்தகர் அணி, சிறுபான்மை நல
உரிமை பிரிவு, உள்ளிட்ட அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும்
பொதுமக்களும் பெருந்திரளாக இரத்ததான முகாமில் கலந்து கொள்ள வேண்டுமென
தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like More from author