மெட்ரோ ரயில் பணிகள் 2018-ல் முடியும்: பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சமாக உயரும் – மெட்ரோ ரயில் அதிகாரிகள் தகவல்

சென்னையில் தற்போது நடந்துவரும் முதல்கட்ட மெட்ரோ ரயில் பணி 2018 ஜூலையில் நிறைவடையும். அப்போது, மெட்ரோ ரயில்களில் தினமும் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 2 லட்சமாக உயரும் என அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 2 வழித்தடங்களில் முதல்கட்டமாக மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு நடந்து வரும் மெட்ரோ ரயில் பணிகளில் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. தற்போது, விமான நிலை யம் – சின்னமலை – கோயம்பேடு – நேரு பூங்கா வரையில் மெட் ரோ ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக, சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் பணி கள் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளன. சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில்சேவை தொடங் கிய பிறகு, பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறும்போது, “சென்னையில் போக்குவரத்து நெரிசல் இன்றி, மக்களுக்கு விரைவான போக்குவரத்து வசதி அளிக்கும் வகையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கடந்த ஜூலை மாதம் வரையில் 95 லட்சத்து 87 ஆயிரத்து 66 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.35.64 கோடி வருமானம் கிடைத்துள்ளது. தற் போது தினமும் சராசரியாக 24 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர்’’ என்றனர்.

You might also like More from author