மைய நூலகத்தில் நூல் வெளியீட்டு விழா

திருவண்ணாமலை, மே.22:

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டக்
கூட்டம் சிந்தனைச் சாரல்-39 எனும் தலைப்பில் மாவட்ட முதன்மைக்கல்வி
அலுவலர் வெ.ஜெயக்குமார் தலைமையில் நேற்று நடந்தது.
விழாவுக்கு வாசகர் வட்டத் தலைவர் அ.வாசுதேவன் முன்னிலை வகிக்க
பேரா.ரா.சங்கர் அனைவரையம் வரவேற்றார். முனைவர் அரங்க மணிமாறன்  எழுதிய
“அறுவடை-சிறுகதை” எனும் நூலினை பேரா.முனைவர். ந.குப்புசாமி, அரசு
கலைக்கல்லூரி அறிமுகம் செய்து  வைத்தார்.
கிருட்டிணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் பேரா.முனைவர்
கா.சிவகாமி நூலினை வெளியிட்டார். இவ்விழாவில் ஏராளமான வாசகர்கள்
பங்கேற்று சிறப்பித்தனர்.
மேலும் மாவட்ட மைய நூலகத்தில் க.கோவிந்தம்மாள் ரமேஷ், முதுகலை தமிழ்
ஆசிரியர், முனைவர்.நீலவல்லி  மற்றும் ஷி. சுந்தரி நடராஜன் ஆகியோர்கள் தலா
ரூபாய் 1000/- கொடுத்து மைய நூலகத்தில் 1136,1137, 1138வது புரவலர்களாக
இணைந்தனர்.
மேலும் மாவட்ட மைய நூலகத்தினை அதிகம் பயன்ப்படுத்தியவர்களுக்கு
முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் திருக்கரங்களால்  பட்டையம்
வழங்கப்பட்டது
மாவட்ட நூலக அலுவலர் இரா. சண்முகநாதன் அறிவுரையின்பேரில் விழாவினை மைய
நூலக நூலகர்கள், வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர். மாணவி ஜெ.
மீனாட்சி  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.முடிவில் நல்நூலகர்
த.கிருட்டிணன் நன்றி கூறினார்.

You might also like More from author