மோடி அரசை கண்டித்து திருவண்ணாமலையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை ஜன 7: திருவண்ணாமலையில் மோடி அரசை கண்டித்து காங்கிரஸ்
கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரூ. 1000, 500 நோட்டுகளை பணமதிப்பு நீக்கம் செய்து பொதுமக்களை வாட்டி
வதைத்து 50 நாட்கள் ஆகியும் இயல்புநிலை திரும்பாமல் வாய்தா மேல் வாய்தா
வாங்கும் மத்திய அரசான மோடி அரசை கண்டித்து திருவண்ணாமலை அண்ணாசிலை
அருகில் தி.மலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன
ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட
காங்கிரஸ் கமிட்டி தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமை தாங்க, தி.மலை நகர
தலைவர் என்.வெற்றிச்செல்வம் அனைவரையும் வரவேவேற்றார் இந்த
ஆர்ப்பாட்டத்தில் மேலிடபார்வையாளர்கள் ஆந்திராவை சேர்ந்த முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணய்யா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
செஞ்சி டி.என்.

முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில்
சிறப்புரையாற்றினர். இதில் நரேந்திர மோடியின் கருப்பு பண ஒழிப்பு
அறிவிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்தூக்கி பார்த்து பாஜக
ஆட்சியாளர்களுக்கு உரிய பாடம் புகட்டவேண்டுமென்றும், கருப்பு பணம்
ஒழியவில்லை. மக்கள் பணம்தான் ஒழிந்திருக்கிறது.

எனவே மத்திய அரசின்
மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக மக்களை திரட்ட அன்னை சோனியாகாந்தி, இளம்
தலைவர் ராகுல்காந்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
சு.திருநாவுக்கரசு, ஆகியோர் வழிகாட்டுதலின்பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ள
காங்கிரஸ் பிரச்சார பயணம் தொடரும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள்
எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள்,
200க்கும் மேற்பட்டோர கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர்
எம்.குமார் நன்றி கூறினார்.

You might also like More from author