எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவிற்காக சிவகங்கை வரும் தமிழக முதல்வர்

எம்.ஜி.ஆர்., நுாற் றாண்டு விழாவிற்காக சிவகங்கை வரும் தமிழக முதல்வர் பழனிசாமியை 5 இடங்களில் வரவேற்க அ.தி.மு.க., பழனிசாமி அணியினர் முடிவு செய்துள்ளனர்.

சிவகங்கையில் நவ., 18ல் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடக்கிறது. இதற்கான அ.தி.மு.க., பழனிசாமி அணியினர் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
அமைச்சர் பாஸ்கரன் தலைமை வகித்தார். எம்.பி., செந்தில்நாதன், மாவட்ட அவைத் தலைவர் காளிதாஸ் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சந்திரன், குணசேகரன், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்டச் செயலாளர் சிவதேவ்குமார், மகளிரணி ஜாக்குலின், மாணவரணி ராஜா, இலக்கிய அணி நடராஜன், மருத்துவரணி கோட்டையன், ஆவின் தலைவர் சண்முகம் பங்கேற்றனர்.
விழாவில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பது, முதல்வரை மணலுார், பூவந்தி, திருமாஞ்சோலை உள்ளிட்ட 5 இடங்களில் வரவேற்பது என முடிவு செய்யப்பட்டது. நவ., 18 காலை 9:00 மணிக்கு புகைப்படக் கண்காட்சியில் 7 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

You might also like More from author