ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று

‘என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம்’ என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார்.

அதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை விடப்பட்டது. தமிழகத்தில் 7 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டிசம்பர் 12-ம் தேதி ரஜினிகாந்த்தின் பிறந்தநாள். வழக்கமாக ரஜினிகாந்த் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் பலரும் போஸ்டர்கள் அடித்து வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.

ஜெயலலிதா காலமானதை ஒட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்றும், சுவரொட்டிகளை தவிர்க்குமாறும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ரஜினி.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ படத்தில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, அதனைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கிறார். ‘2.0’ திரைப்படம் 2017-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

You might also like More from author