ரசிகர்கள் சந்திப்பை ரத்து செய்தார் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த், ஏப்ரல்-12 முதல் 16-ம் தேதி வரை ரசிகர்களை சந்திப்பதாக இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதாக ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக தற்போது அறிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

இந்த சந்திப்பு ரத்து குறித்து வாட்ஸ்அப்பில் ஆடியோ வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த். அதில், ‘மாவட்ட வாரியாக ரசிகர்களை சந்திப்பது குறித்து எதிர்காலத்தில் அறிவிப்பேன். தனித்தனியாக ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பது நடைமுறையில் ரொம்ப கஷ்டம். அதனால், ஒன்று அல்லது இரண்டு மாவட்டங்கள் என ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள கூடிய விரைவில் திட்டமிடுவோம். ரசிகர்கள் என் முடிவுக்கு ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

You might also like More from author