Mar 21, 2017
9 Views
0 0

ராமேஸ்வரம் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்துள்ளனர்

Written by
banner

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்துள்ளனர்.

நடுக்கடலில் மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பும்போது படகு பழுதானதால் மீனவர்கள் கடலிலேயே இருந்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 10 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் சுட்டதில் அவர் பலியானார்.

இதனையடுத்து கடந்த 2 வாரங்களாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லாமல் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தனர்.

மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும், நிர்மலா சீதாராமன் ஆகியோர் மீனவர்களிடையே நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதில் மீண்டும் கடலுக்கு சென்றனர்.

இந்நிலையில், மறுபடியும் இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்துள்ள  சம்பவம்  அவர்களது உறவினர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Article Categories:
தமிழகம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *