ரூபாயின் மதிப்பு சரிவு – ரூ.64.34

இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்த போதிலும் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.64.34-ஆக வர்த்தகமானது. உலகளவில் டாலரின் மதிப்பு உயர்ந்து பிறநாட்டு கரன்சிகளின் மதிப்பு சரிந்ததாலும், வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகளவில் தேவைப்படுவதாலும் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூபாயின் மதிப்பு ரூ.64.28-ஆக இருந்தது.

You might also like More from author