Home இந்தியா புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் ரூ.1000 நோட்டுகளை அச்சடிக்கும் பணிகளை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் ரூ.1000 நோட்டுகளை அச்சடிக்கும் பணிகளை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது

21

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதியன்று, கருப்புப் பணப்புழக்கம், கள்ளநோட்டுகள் போன்றவற்றை தடுக்கும் வகையில், ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என,, பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் மக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகினர்.

புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு அவை வங்கிகள், ரிசர்வ் வங்கி கருவூலத்தில் சேர்க்கப்பட்டன.

இந்நிலையில் சில்லறை தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.2000 மற்றும் ரூ.500 புதிய நோட்டுகளை வெளியிட்டது.

தற்போது, புதிய ரூ.1000 நோட்டுகளை மீண்டும் புழக்கத்தில் விட மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் முடிவு செய்துள்ளது.

இதற்காக, புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ரூ.1000 நோட்டுகளை அச்சடிக்கும் பணிகளை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது.

முழுவீச்சில் புதிய நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் எனவும் ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளைப் போன்றே, ரூ.1000 நோட்டுகளும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதேபோன்று, ரூ.100 மற்றும் ரூ.50 புதிய நோட்டுகளும் விரைவில் அச்சடிக்கப்பட்டு, வெளியிடப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.