ரேஷன் கடை முறைகேடுகளை கண்டித்து ஆர்பாட்டம்

திருவண்ணாமலை, மே 18:

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரத்தில் ரேஷன் கடை
முறைகேடுகளை கண்டித்து ஆர்பாட்டம் நடந்தது. வாணாபுரம் வருவாய் ஆய்வாளர்
அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்ஸிஸ்ட்) கட்சி சார்பில்
ஆர்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு தாலுக்கா செயலாளர் அண்ணாமலை தலைமை
வகித்தார். நிர்வாகிகள் ஜனார்தனன். வெங்கட்ராமன். காமராஜ். தணிகாசலம்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆர்பாட்டம்
குறித்து பேசினார். ஆர்பாட்டத்தில் ரேஷன் கடையில் நடக்கும் முறைகேடுகளை
(எடை குறைவு  ரேஷன் பொருட்களை கள்ள சந்தையில் விற்பது); ரேஷன் கடையல் தனி
நபர் வேலை செய்வதை தடுக்க வேண்டியும். நூறு நாள் வேலை திட்டத்தில அரசு
ஆணையிட்ட 150 ஆக தொடர்ந்து வேலை தருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறித்தி
ஆர்பாட்டம் நடந்தது. இதனை அறிந்த துணை பிடிஓ வெங்கடேசன் மற்றும் விஏஓ
பாக்யராஜ் சம்பவ இடத்திற்கு வந்து உங்கள் கோரிக்கைகளை உடன் தீர்த்து
வைப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சிபிஎம்(எம்) கட்சியினர் கலைந்து
சென்றனர்

You might also like More from author