லாரன்ஸ் பீட்டாவுக்கு கடும் கோபத்துடன் ராயபுர பாசையில் பேசியுள்ளார்

லாரன்ஸ் பீட்டாவுக்கு கடும் கோபத்துடன் ராயபுர பாசையில் பேசியுள்ளார்

ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுடைய முழு கோபமும் மிக அதிகமாக பாய்ந்துள்ளது பீட்டா அமைப்பு மீது தான். காரணம் அவர்கள் ஜல்லிக்கட்டு குறித்து மிக மோசமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த சர்ச்சை பேச்சுக்கு செம மாஸ்ஸாக பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் லாரன்ஸ்.

அவர் கூறுகையில்; ஹேய். நான் ராயபுரத்துகாரன் ஆனாலும் இப்போ ரொம்ப நாகரீகம்மா பேசுகிறேன் பக்கத்துல என் சகோதர சகோதரிகள் இருக்காங்க… என்று கூறி தன்னுடைய நிஜ பேச்சு வழக்கில் பீட்டாவை சாடினார். மேலும் எங்களுடைய ஜல்லிக்கட்டு விளையாட்டை வேண்டாம் என சொல்ல நீ யார்? அமெரிக்காவில் இருந்து வந்து நீ தடை போட்டாள் நாங்கள் அதை ஏற்று கொண்டு போய்விடணுமா.

தமிழ் நாட்டில் உள்ள எங்களுக்கே சேலஞ்சு பண்ணுகிறாய் உனக்கு எவ்வளவு திமிர் இருக்கனும் என,சென்னை பாஷையில் பேசி ஓட்டு தமிழர்களில் உள்ளத்தில் இடம் பிடித்தார். மேலும் ராதா ராஜன் கூறிய கருத்திற்கு பதிலடி கொடுத்த லாரன்ஸ், என் சகோதர சகோதரிகள் இன்று எந்த ஒரு பயமும் இன்று அனைவருடனும் சேர்ந்து உறங்குகின்றனர்.

காந்தி அன்று சொன்னார் எந்த பெண் இரவில் சுதந்திரமாக வெளியில் நடக்கிறாளோ அன்று தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து விட்டது என்று, இந்த போராட்டம் மூலம் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து விட்டதை நம்புவதாகவும். மேலும் இந்த போராட்டம் மூலம் நிறைய மாற்றங்கள் நிகழும் எனவும், இளைஞர்களுக்கு என்றும் உறுதுணையாக நான் இருப்பேன் என லாரன்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like More from author