லெட்டர் பேடில் சசிகலா பெயர் பெரிதானது அம்மாவின் பெயர் சிறிதானது

லெட்டர் பேடில் சசிகலா பெயர் பெரிதானது

அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆனபிறகு முதன்முறையாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் சசிகலா. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவுக்காக நாணயம் மற்றும் அஞ்சல்தலை ஆகியவற்றை வெளியிட வேண்டும் என மத்திய அரசை அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

பிரதமருக்கு சசிகலா எழுதிய கடிதத்தின் லெட்டர் பேடு மீடியாவின் பார்வைக்கு வந்திருக்கிறது. அதில் ஜெயலலிதாவின் பெயர் சிறியதாகவும், சசிகலாவின் பெயர் பெரிதாகவும் இடம்பெற்றிருக்கிறது.

லெட்டர் பேடின் வலதுபக்கம் பொதுச்செயலாளர் என்ற இடத்தில் சசிகலாவின் பெயர் பெரிதாக பொறிக்கப்பட்டிருக்கிறது. இடது பக்கத்தில் ‘மக்களால் நான்.. மக்களுக்காக நான்’ என பொன்மொழியை போட்டு அதற்கு கீழே ஜெயலலிதாவின் பெயர் சிறியதாக எழுதப்பட்டிருக்கிறது

You might also like More from author