வங்காள தேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் நாளில் 428 ரன்கள் குவித்தது தென்ஆப்பிரிக்கா

தென்ஆப்பிரிக்கா – வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் பிளோயம்ஃபோன்டின் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேச அணி கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் டீன் எல்கர், மார்க்கிராம் ஆகிய தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

இருவரும் வங்காள தேசத்தின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன்கள் குவித்தனர். தொடக்க வீரர்களை பிரிக்க வங்காள தேச பந்து வீச்சாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால் பலனளிக்கவில்லை. 8 பேர் பந்து வீசினார். 8 பேரின் பந்து வீச்சையும் விளாசிய இருவரும் சதம் அடித்தனர்.

தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 243 ரன்னாக இருக்கும்போது டீன் எல்கர் 113 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய மார்க்கிராம் 143 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

4-வது விக்கெட்டுக்கு அம்லா உடன் கேப்டன் டு பிளிசிஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் தென்ஆப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 90 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்தது. அம்லா 89 ரன்னுடனும், டு பிளிசிஸ் 62 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இன்றைய 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் அம்லா சதம் அடித்தார்.

You might also like More from author