வடபழநியில் காதலருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி

சென்னை வடபழனி பக்தவச்சலம் காலனியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி பாரதிக்கும், சக ஊழியரான ரவீந்திரன் என்பவருக்கும் தகாத உறவு இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், கணவனை கொலை செய்ய திட்டமிட்ட பாரதி, நேற்றிரவு தனது இல்லத்திற்கு ரவீந்தரனை வரவழைத்துள்ளார்.

பின்னர், ரவீந்திரன் உதவியுடன் கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். சந்தேகம் வராமல் இருப்பதற்காக பாரதியை கயிற்றால் கட்டிப் போட்டுவிட்டு ரவீந்தரன் வெளியே சென்றார்.

அந்த நேரத்தில் ரோந்து பணியில் இருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் ரவீந்தரனை விசாரித்தனர். இதில் கோபாலகிருஷ்ணனை கொலை செய்ததை ரவீந்தரன் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே வீட்டில் கைகள் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்த பாரதியை மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிறையில் தாக்கப்பட்டது தொடர்பாக பியூஸ் மானுஷுடன் தொலைபேசியில் உரையாடிய காவலர் பணியிடை நீக்கம்…

You might also like More from author