வலை வீசி மானை பிடித்து கொன்றவரிடம் விசாரணை

திருவண்ணாமலை மார்ச் 24:

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே மானை
வலைவீசி பிடித்து அறுக்க முயன்றவரிடம் வனத் துறையினர் விசாரணை செய்து
வருகின்றனர். சமீபகாலமாக தாகத்தை தணிக்க காட்டிலிருந்து கிராமங்களுக்கு
யானை, பன்றி, மான் போன்ற வன விலங்குகள் தண்ணீர் குடிக்க நீர் நிலைகளை
தேடி வருகின்றன. தண்ணீருக்காக வருபவைகள் வழியில் உள்ள கரும்பு, நெல்
மற்றும் வாழை போன்ற பயர்களை சேதப்படுத்தியும் சில நேரங்களில்
விவசாயிகளின் உயிரை பறிப்பதும் தொடர் கதையாகிறது. இதற்காக வனத்துறையினர்
காடுகளில் தண்ணீர் தொட்டிகள் அமைத்தும் தடுப்பு வேலிகள் அமைத்தும்
மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர். அப்படி இருந்தும் சில நேரங்களில்
மான் மற்றும் காட்டுப் பன்றிகள் வயல்களில் புகுந்து விடுகின்றன. இதுபோல்
நேற்று காலை தண்டராம்பட்டினை அடுத்த ராதாபுரம் காப்புக் காட்டுப்
பகுதியில் தண்ணீர் பந்தல்_சே.கூடலூர் செல்லும் பாதையில் தண்ணீர் பந்தல்
கொல்லக் கொட்டாவினைச்  சேர்ந்த முனுசாமி (40) என்பவரது நிலத்திற்கு
காட்டில் இருந்து தண்ணீர் குடிக்க வழி தவறி வந்துள்ளது. அந்த மானை
வலைவீசி முனுசாமி பிடித்து கொன்றுள்ளார். இதனை அறிந்த வனத்துறை ரேஞ்சர்
வசந்த பாஸ்கர் தலைமையில் வனவர் வெங்கட்டராமன், வனக்காப்பாளர்கள்
பாலகிருஷ்ணன், பாலாஜி, வீராசாமி மற்றும் சேகர், சிவக்குமார் ஆகியோர்
சம்பவ இடத்திற்கு சென்று மானை அறுப்பதற்கு முன் கைபற்றினர்.

You might also like More from author