‘வாட்ஸ்-ஆப்,’ ‘டுவிட்டரில்’ புகார் தெரிவிக்கும் வகையில் சிவகங்கை கலெக்டர் ஏற்பாடு..

எஸ்.எம்.எஸ்., ‘பேஸ்புக்,’ ‘வாட்ஸ்ஆப்,’ ‘டுவிட்டரில்’ புகார்களை பெற சிவகங்கை கலெக்டர் லதா ஏற்பாடு செய்துள்ளார்.
அதிகாரிகள் மக்களை நோக்கி சென்று, குறைகளை நிவர்த்தி செய்வதற்காக கலெக்டர் முயற்சி எடுத்து வருகிறார். இதற்காக மக்கள் தங்களது குறைகளை தெரிவிக்கும் வகையில் ‘பேஸ்புக்,’ ‘வாட்ஸ்ஆப்,’
‘டுவிட்டரில்’ கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன.
குடிநீர், சுகாதாரம் குப்பை அகற்றுதல், தெருவிளக்கு, மின்சாரம், விவசாயம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். இதனை எஸ்.எம்.எஸ்., மூலமாகவும் தெரிவிக்கலாம். எஸ்.எம்.எஸ்., ‘வாட்ஸ்ஆப்பில்’ அனுப்ப 89033 31077 யை தொடர்பு கொள்ளலாம்.பேஸ்புக் முகவரி:www.facebook.com/sivagangacollector.
டுவிட்டர் முகவரி: Twitter-twitter.com/svgcollector. இவ்வாறு மாவட்ட நிர்வாகம் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

You might also like More from author