விக்ரமுக்கு ஜோடியாகும் மலர் டீச்சர்..!

‘பிரேமம்’

எனும் மலையாள படத்தில் மலர் டீச்சராக அறிமுகமானவர் சாய் பல்லவி. தற்போது தமிழில் விக்ரம் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக களமிறங்கவுள்ளார்.

வாலு பட இயக்குனர் விஜய்சந்தர் இயக்கும் படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. படத்தின் கதையை கேட்ட சாய் பல்லவி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என அதிகாரபூர்வமாக இயக்குனர் தெரிவித்துள்ளார். மிக பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க உள்ளது. மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாறுபட்ட கதாப்பாத்திரங்களையும், வித்தியாசமான கதையம்சங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் விக்ரம் இப்படத்தில் எவ்வாறான தோற்றத்தில் களமிறங்குவர் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

You might also like More from author