விடுதலைப் பெருநாள்: தேசிய கொடிக்கான தேவை ஆண்டுதோறும் பெருகுகிறது

தேசிய கொடியை தயாரிக்க அனுமதி பெற்ற ஒரே நிறுவனமான கர்நாடக காதி மற்று கிராமாத்யோகா சம்யுக்த சங்கா கூட்டமைப்பின் செயலாளர் ஷிவானந்தா எஸ் மாடபதி இத்தகவலை வெளியிட்டார்.
அக்கூட்டமைப்பின் பெங்கேரி அலகு மட்டுமே நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் தேசிய கொடியைத் தயாரிக்கிறது.
“இந்தாண்டின் தேவை ஜூன் மாதமே துவங்கிவிட்டது. இந்தாண்டு விற்பனை ரூ. 2.5 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த 2015-16 ஆம் ஆண்டில் விற்பனை ரூ. 1.54 கோடியாக இருந்தது; சென்றாண்டு இது ரூ. 1.92 கோடியாக இருந்தது. இந்தாண்டு குடியரசு தினத்திற்கு (ஜனவரி 26, 2018) முன்பே ரூ. 2.50 கோடியாக இருக்கும்” என்கிறார் மாடபதி.
இந்திய தரநிர்ணய அமைப்பு நிர்ணயித்துள்ள வடிவமைப்பு வழிகாட்டு விதிகளை அடியொற்றியே இக்கொடிகளை தயாரிக்கிறோம் என்கிறார் அவர். இக்கொடிகள் ஆந்திரம், அருணாச்சலம், உ.பி., அஸாம், ஜார்க்காண்ட், தமிழ்நாடு, புதுடெல்லி, கோவா, ஒடிசா, குஜராத், சத்திஸ்கர், பிகார், ராஜஸ்தான் மற்றும் ம.பி ஆகியவற்றில் விற்கப்படுகின்றன.
தேசிய கொடிகளை பல்வேறு அளவுகளில் தயாரித்தாலும் தரநிர்ணயபடியே தயாரிக்கின்றனர். இவற்றின் விலை ரூ. 316 முதல் ரூ. 17,800 வரை இருக்கிறது. சட்டப்பையில் குத்திக்கொள்ளும் 2×3 இன்ச் அளவுள்ள கொடிகளையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது. இக்கொடிகளை பல நிறுவனங்கள் மொத்தக் கொள்முதலாக வாங்குகின்றன. பாகல்கோட்டில் அமைந்துள்ள சிறு அலகுகளிலிருந்து காதித் துணிகள் மற்றும் இதர மூலப்பொருட்களை வாங்கி  துணிக்கொடிகளை தயாரிக்கின்றனர்.
மேலும் அரசு பிளாஸ்டிக் கொடிகளை தடை செய்து விட்டதால் சட்டப்பை கொடிகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கொடிகள் அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி கல்வி நிறுவனங்கள், சட்டக்கல்லூரிகள், தனியார் நிறுவனங்களும் வாங்குகின்றன.

You might also like More from author