விராட் கோஹ்லி இரட்டை சதம் அடித்து அபார சாதனை படைத்துள்ளார்

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி இரட்டை சதம் அடித்து அபார சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

நேற்று ஐதராபாத்தில் தொடங்கிய டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழந்து 356 ஓட்டங்கள் எடுத்தது. விராட் கோஹ்லி 111 ஓட்டங்களுடனும், ரஹானே 45 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.

இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார்.

இதன் மூலம் தொடர்ந்து நான்கு டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற சாதனை அவர் படைத்துள்ளார்.

தொடர்ந்து விளையாடி கோஹ்லி 204 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தற்போது, முதல் இன்னங்சில் இந்தியா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 501 ஓட்டங்கள் குவித்து தொடர்ந்து விளையாடி வருகிறது. அஸ்வின், சாஹா ஆகியோர் களத்தில் விளையாடி வருகின்றனர்.

You might also like More from author