விழிப்புணர்வு முகாம் வரட்சணை கேட்கும் மாப்பிள்ளையை ஒதுக்குங்கள்

திருவண்ணாமலை, ஜன 18:

புதுச்சேரி கள விளம்பர அலுவலகம், சுகாதரப் பணிகள்
துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் சினம் தொண்டு நிறுவனம் ஆகியன இணைந்து
தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்தைச் சேர்ந்த ராயண்டபுரம்
கிராமத்தில்  நடத்திய தாய்-சேய் நலம் மற்றும் வளர் இளம் பருவத்தினர் நலம்
குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர்
பெ.கிரிஜா தலைமை தாங்க, புதுச்சேரி கள விளம்பர உதவியாளர் மு.தியாகராஜன்
வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்
பிரசாந்த் மு வடநேரே பேசுகையில்,
குழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் ஆண் பெண் வித்தியாசத்தைக் காட்டக்கூடாது.
கபடி விளையாடு என்று தம் பெண் குழந்தைகளைத் தாய்மார்கள் அனுப்பி வைக்க
வேண்டும். நொண்டி, பல்லாங்குழி விளையாடுவது இனி பெண்கள் வேலையாக இருக்கக்
கூடாது. வரதட்சணைக்காகப் பெண்கள் இனியும் பணம் சேர்த்துக்கொண்டிருக்கக்
கூடாது. வரதட்சணை கேட்கும் ஆண்களைப் பெண்கள் வேண்டாம் எனத் தைரியமாக
ஒதுக்கிவிட வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி கள விளம்பர உதவி இயக்குனர் டாக்டர்
தி.சிவக்குமார் நோக்கவுரை ஆற்றினார். சுகாதரப் பணிகள் துணை இயக்குனர்
டாக்டர் ஆர்.மீரா துவக்கவுரை ஆற்றினார்.
கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பா.இரேணுகாம்பாள், வேலூர் மண்டல
பூச்சியியல் குழு முதுநிலை பூச்சியியல் வல்லுனர் டாக்டர்
கி.கோபாலரத்தினம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாவட்ட தாய்-சேய் நல
அலுவலர் சி.ராஜேஸ்வரி, மாவட்ட கொள்ளை நோய் மருத்துவ அலுவலர் டாக்டர்
மேஜர் திருஞானம், சினம் தொண்டு நிறுவன இயக்குனர் இராம பெருமாள்,
தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்க மாநிலத் தலைவர்
கே.பி.அருச்சுனன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோ.பரிதிமால்,
ந.கிருஷ்ணமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தே.பிரபாகரன், அரசு
உதவி சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.துரை வினாயகம் குழந்தை
வளர்ச்சித் திட்ட அலுவலர் ஆர்.தனலட்சுமி, இராயண்டபுரம் அரசு மேல் நிலைப்
பள்ளி தலைமையாசிரியை கே.தேவந்தி ஆகியோரும் பேசினர்.
முன்னதாகப் பள்ளி மாணவர்களின் ஊர்வலத்தை ஆட்சியர் பிரசாந்த் வடநேரே
கொடியசைத்துத் துவக்கி வைத்தார். மேலும் ஆரோக்கிய குழந்தைகளுக்கும்
பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் கலை நிகழ்ச்சிகள்
நடத்திய மாணவிகளுக்கும் ஆட்சியர் பரிசுகள் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. அனைவருக்கும் நிலவேம்பு
குடிநீர் வழங்கப்பட்டது.
முடிவில் சென்னை கள விளம்பர உதவியாளர் எஸ்.ஆர்.சந்திரசேகரன் நன்றி கூறினார்.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com