விவசாயகளின் போராட்டத்திற்கு ஆதரவான ‘பந்த்’ எ.வ.வேலு எம்எல்ஏ உள்பட 2 ஆயிரம் பேர் கைது

திருவண்ணாமலை, ஏப் 26:

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளின்
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர்
நடத்திய பந்த்தில் எ.வ.வேலு எம்எல்ஏ உள்பட 2 ஆயிரம் பேர் போலீசாரால் கைது
செய்யப்பட்டனர். இதையட்டி மாவட்டத்தில் 10 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன.
வறட்சி நிவாரணம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டற்கு நிவாரணம் வழங்க
வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளுக்கு
ஆதரவாக திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் நடத்திய பந்ததில் பேருந்து,
லாரிகள், ஆட்டோ, வேன்கள் மற்றும் ஹோட்டல்கள் வர்த்தக நிறுவனங்கள் முதலியன
முழுமையாக மூடப்பட்டிருந்தது. திருவண்ணாமலையில் எ.வ.வேலு எம்எல்ஏ
தலைமையில் பேருந்து நிலைய ரவுண்டானாவிலிருந்து பேருந்து நிலையம் வரை
ஊர்வலமாக சென்று மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் வேட்வலத்தில்
கு.பிச்சாண்டி எம்எல்ஏ தலைமையிலும் செங்கத்தில் மு.பெ.கிரி எம்எல்ஏ
தலைமையிலும் போளூரில் கே.வி.தனசேகரன் எம்எல்ஏ தலைமையிலும் வந்தவாசியில்
அம்பேத்குமார் எம்எல்ஏ தலைமையிலும் மறியல் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த
மறியலில் மாவட்டம் முழுவதும் திமுக மற்றும் தோழமை கட்சிகளை சேர்ந்த
சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டு கைதாகினர். திருவண்ணாமலை
ஜோதிமார்க்கெட்டில் உள்ள 250க்கும் மேற்பட்ட சில்லரைகடைகள் மலர் சங்க
வியாபாரிகள் சங்க தலைவர் டி.எம்.சண்முகம் தலைமையில் கடைகளை அடைத்து
போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் செயலாளர் எஸ்.ஆர்.ரங்கநாதன், பொருளாளர்
என்.ஏ.கே.அய்யனார் உள்பட வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதேபோல்
தண்டராம்பட்டு தாலுக்காமுழுதும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள்
ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில் பஸ் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டு கைது
செய்யப்பட்டனர். இந்த மறியலில் நகர காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அண்ணாமலை, விடுதலை சிறுத்தை மாதேஸ்வரன்
உள்ளிட்டோர் கலந்து கொண்டர். அனைத்து வர்த்தக நிறுவனங்களும்
அடைக்கப்பட்டிருந்தன.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com