Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக வரும் 25ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏ. தகவல் - Naangamthoon

விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக வரும் 25ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏ. தகவல்

திருவண்ணாமலை, ஏப். 20:

விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வரும் 25ந்தேதி அன்று தமிழகத்தில் அனைத்துக்
கட்சிகளின் சார்பில், முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏ.. தலைமையில் நேற்று நடைபெற்றது.

நதிநீர் இணைப்பு, விவசாயிக்கடன்கள் தள்ளுபடி வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 35 நாட்களாக இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் பல்வேறு வடிவங்களிலான போராட்டங்களை தொடர்ந்து தமிழக விவசாயிகள் நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின்
அவர்கள் தலைமையில் கடந்த 16ந் தேதி அன்று நடைபெற்ற அனைத்து கட்சி தலைவர்கள், கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழகத்தில் வரும் 25 அன்று முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது திருவண்ணாமலை, திருக்கோவிலூர் சாலை, சாரோனில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டம் குறித்து அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ.. தலைமை வகித்தார்.

ஆலோசனை கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம், கழக தணிக்கைகுழு உறுப்பினர் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் த.வேணுகோபால், கழக சொத்து பாதுகாப்புக்குழு செயலாளர் பெ.சு.திருவேங்கடம்,
இந்திய தேசிய காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் எம்.வசந்தராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கு.ஜோதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் இ.முகமது அலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் எம்.கலிமுல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சி.கே.அம்பேத் வாளவன், திராவிடர் கழக சார்பில் ஆர்.திருமலை, பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பி.காமராஜ், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி மாவட்ட செயலாளர் பி.வாசு, உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட தலைவர் வி.சுப்ரமணியன், சமுத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் சேத்பட்.போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆலோசனை கூட்டத்தில் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ. எம்.வசந்தராஜ், தோழர்.வீரபத்திரன், தோழர் கு.ஜோதி, இ.முகமதுஅலி, எம்.கலிமுல்லா, சி.கே.அம்பேத் வாளவன், பாஸ்கர் ஆகியோர் கருத்துகள் வழங்கி பேசினர். அலோசனை கூட்டத்தில், விவசாயிகளின் நலன் கருதி, மாநிலம் தழுவிய அளவில் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்தில் தொழிற்சங்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பேராதரவு தருவுதடன், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆதரவு தந்து விவசாயிகளின் துயர் துடைக்க துணை நிற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம், எனதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் குறித்து விளக்கியும், கருத்துக்கள் வழங்கியும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏ. சிறப்புரை ஆற்றினார்.
ஆலோசனை கூட்டத்தில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, போளூர் சட்டமன்ற உறுப்பினர் கே.வி.சேகரன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் மு.அம்பேத்குமார், மாவட்ட துணை செயலாளர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் உட்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

You might also like More from author