விவசாயிகளுக்கு மான்ய விலையில் உலர் தீவனம் வழங்கும் பணியை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கிவைத்தார்

திருவண்ணாமலை, மார். 9:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் கால்நடை
மருந்தகம், உலர் தீவன கிடங்கு மூலம் வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ்
விவசாயிகளுக்கு மானிய விலையில் உலர் தீவனம் வழங்கும் பணியை அமைச்சர்
சேவூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
சேத்துப்பட்டு கால்நடை மருந்தகம், உலர் தீவன கிடங்கில், கால்நடை
பராமரிப்புத்துறை மூலமாக வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ் கால்நடை
விவசாயிகளுக்கு மானிய விலையில் உலர் தீவனம் வழங்கும் பணியை மாவட்ட
வருவாய் அலுவலர் சா.பழனி, தலைமையில், தமிழக இந்து சமயம் மற்றும்
அறநிலையத் துறை அமைச்சர் சேவூர்.எஸ்.இராமச்சந்திரன், துவக்கி வைத்து,
கால்நடை தீவனம் வழங்கும் அட்டைகளை வழங்கினார். கால்நடை பராமரிப்புத் துறை
மண்டல இணை இயக்குநர் திரு.எஸ்.கந்தசாமி உடன் இருந்தார்.
தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக திருவண்ணாமலை
மாவட்டத்தில், வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை, மங்கலம்,
தண்டராம்பட்டு, வானாபுரம், செங்கம், புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர்,
வேட்டவலம், கலசபாக்கம், மேலாரணி, போளுர், கேளுர், சேத்பட், மொடையூர்,
காட்டுக்காநல்லூர், எஸ்.வி.நகரம், தௌ;ளார், பெரணமல்லூர், தண்டரை,
வீரம்பாக்கம், வெம்பாக்கம், பிரம்மதேசம், ஆகிய கால்நடை மருந்தகங்கள்
மற்றம் கால்நடை மருத்துவமனைகளில் 22 உலர் தீவன கிடங்குகள் நிறுவியுள்ளது.
வறட்சி நிலை சீராகும் வரை ஒரு கால்நடைக்கு தினம் 3 கிலோ வீதம் அதிகபட்சம்
5 கால்நடைகளுக்கு ஒரு வாரத்திற்கு 105 கிலோ வரை விவசாயி ஒருவருக்கு உலர்
தீவனம் மானிய விலையில் கிலோ ஒன்றுக்கு ரூ.2 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, கால்நடை வளர்ப்போர் தங்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன்
உலர் தீவனக்கிடங்கு அமைந்துள்ள கால்நடை மருந்தகத்தில், கால்நடை உதவி
மருத்துவரை அணுகி பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com