வீட்டு கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை

திருவண்ணாமலை, ஏப் 25:

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே வீட்டின்
கதவை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த மர்ப நபர்களை போலீசார்
தேடிவருகின்றனர். தானிபபாடி அருகே ரெட்டியார்பாளைத்தைச் சேர்ந்தவர்
சின்னத்தம்பி (38). இவர் பெங்களூரில் கம்பி கட்டும் தொழிலாளியாக வேலை
செய்து வருகிறார். இவரது மனைவி அமராவதி ரெட்டியார்பாளையத்தில் வீட்டிலேயே
தையல் வேலை செய்து வருகிறார். சின்னத்தம்பி கடந்த 21ந் தேதி சொந்த
ஊருக்கு வந்து குடும்பத்துடன் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்று
விட்டு பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அபபோது வீட்டின் கதவு
பூட்டு உடைக்கப்ட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியுற்றவர் உள்ளே சென்று
பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் தங்க நகைகள்
மற்றும் ரொக்கம் ரூ 12000ஐ யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் செனறுள்ளது
தெரிந்தது. உடன் அவர் தானிபபாடி போலீசில் புகார் அளித்ததின் பேரில்
இன்ஸ்பெக்டர் மதியரசன் வழக்குபைதிவு செய்து விசாரித்து வருகிறார்.

You might also like More from author