Home கல்வி வெற்றி பெற வெறித்தனமாக உழைக்க வேண்டும் ஆளுமை பயிற்சியாளர் பேச்சு

வெற்றி பெற வெறித்தனமாக உழைக்க வேண்டும் ஆளுமை பயிற்சியாளர் பேச்சு

42

ஐ.ஏ .எஸ்.உட்பட போட்டி தேர்வுகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல்

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்நடுநிலைப் பள்ளியில் பள்ளி பருவத்தில் போட்டி தேர்வுகளுக்கான ஆளுமை தன்மையை வளர்த்து கொள்வது எவ்வாறு என்பது தொடர்பான பயிற்சி நடைபெற்றது.

 பயிற்சிக்கு வந்தவர்களை ஆசிரியை சாந்தி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.அரியலூர் தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய பயிற்றுனர் ராஜேஷ் மாணவர்களுக்கு போட்டி தேர்வு தொடர்பான ஆளுமை தன்மையை வளர்ப்பது தொடர்பாக பயிற்சி அளித்து பேசுகையில் , ஐ.ஏ.எஸ். தேர்வு முதல் நிலைத் தேர்வு , முதன்மை தேர்வு,நேர்முகதேர்வு என மூன்று நிலைகளில் நடைபெறுகிறது.கல்லுரி படிப்பில் இறுதி ஆண்டில் முதல் நிலை தேர்வு எழுத வேண்டும்.நீங்கள் பள்ளி படிப்பு படிக்கும்போதில் இருந்து பொது அறிவு,நாட்டு நடப்பு விசயங்கள்,6ம் வகுப்பு  முதல் 12ம் வகுப்புவரை அனைத்து பாடங்களையும் தெரிந்து கொள்வதோடு அன்றாட செய்தித்தாள்களை படித்து முக்கிய தகவல்களை எழுதிக் கொள்ள வேண்டும்.இந்தியாவில் ஐ.ஏ.எஸ்.தேர்வுக்கு ஒரு லெட்சம் பேர் முதல் நிலை தேர்வு எழுதினால் 10,000 பேர் முதன்மை தேர்வுக்கு தேர்வாவர்கள்.அதில் 2,000 பேர் நேர்முகத்தேர்வுக்கு தேர்வாவர்.அதனில் 1,000 பேர் பணிக்கு தேர்ந்தெடுக்கபடுவர்.இந்த தேர்வில் சூழ்நிலையை சரியாக கையாள தெரிந்திருக்க வேண்டும்.பணம் கொடுத்தால் தான் பதவி கிடைக்கும் என்பது தவறானது.நேர்மையாக உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்.வெற்றி பெற வெறித் தனமாக உழைக்க வேண்டும்.உழைப்பு,தன்னம்பிக்கை ,விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்.நாம் ஜெயிப்பதற்கு நாம் தான் காரணம்.நம்மை நாம் நம்பவேண்டும்.இப்பொழுது இருந்தே உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு பேசினார்.மாணவர்கள் காயத்ரி,தனலெட்சுமி,ஜெகதீஸ்வரன்,பரமேஸ்வரி,ராஜேஸ்வரி,ஜீவா,ராஜேஷ்,விக்னேஷ்,ஹரிஹரன்,ராஜி,ஜெனிபர்,சக்தி,காவியா ஆகியோர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிறைவாக ஆசிரியை செல்வ மீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி பருவத்தில் போட்டி தேர்வுகளுக்கான ஆளுமை தன்மையை வளர்த்து கொள்வது எவ்வாறு என்பது தொடர்பான பயிற்சியினை பயிற்சியாளர் ராஜேஷ் நடத்தினார்.

கூடுதல் தகவல்கள் :

பயிற்சியாளரிடம் மாணவர்கள் கேள்வி மற்றும் பதில்கள்

காயத்ரி : *IAS தேர்வு என்றால் என்ன ?*

பயிற்சியாளர் பதில் : IAS மற்றும் IPS உள்ளிட்ட

24 பணிகளுக்காக

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தினால்(UPSC) ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வே(CIVIL SERVICE EXAM) மிகவும் பிரபலமாக IAS தேர்வு என்று அழைக்கப்படுகிறது.

பரமேஸ்வரி : *IAS தேர்வு எழுதுவதற்கான கல்வித் தகுதி என்ன ?*

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும்.

ராஜேஷ்  : *IAS தேர்விற்கான வயது வரம்பு என்ன ?*

பயிற்சியாளர் பதில் :குறைந்தபட்ச வயது :

21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்

அதிகபட்ச வயது : பொதுப்பிரிவினர்

(GENERAL) : 32

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) :35

ஆதிதிராவிடர்c/பழங்குடியினர்(SC/ST) : 37.

ஜீவா : *ஒருவர் IAS தேர்வை எத்தனை முறை எழுத முடியும் ?*

பயிற்சியாளர் பதில் :பொதுப்பிரிவினர் (GENERAL) : 6 முறை

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) : 9 முறை

ஆதிதிராவிடர்/பழங்குடியினர்(SC/ST) : எண்ணிக்கை இல்லை(Unlimited)

விக்னேஷ் *ஏன் IAS தேர்வு எழுத வேண்டும் ?*

பயிற்சியாளர் பதில் :சமூகம் மற்றும் நாட்டிற்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு

ஆளுமை அதிகாரம்

பெருமதிப்பிற்குரிய பணி

சமூகத்தில் மிகவும் அதிகமான மரியாதை

மேலும் பல…..

ராஜேஸ்வரி *IAS தேர்வு எழுதுவதற்கு ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டுமா ?*

பயிற்சியாளர் பதில் :இல்லை. அடிப்படை ஆங்கில அறிவு மட்டுமே போதுமானது.

ஹரிஹரன் *IAS தேர்வை தமிழில் எழுதமுடியுமா ?*

பயிற்சியாளர் பதில் :முடியும்.IAS முதன்மைத் தேர்வை தமிழில் எழுதலாம்.

சக்தி *IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வீதம் 365 நாட்கள் படிக்க வேண்டுமா ?*

பயிற்சியாளர் பதில் :இல்லை.

ஒரு நாளைக்கு 4 முதல் 8 மணிநேரம் படித்தால் மட்டுமே போதுமானது.

தனலெட்சுமி : IAS தேர்வை ஒரு வருடத்திற்கு இலட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர்.

ஆனால் சிலரே தேர்வில் வெற்றியடைகின்றனர்.

*என்னால் முடியுமா ?*

பயிற்சியாளர் பதில் :கண்டிப்பாக முடியும்.

இலட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கவும்,தேர்வு எழுதவும் செய்கின்றனர்.

ஆனால் உண்மையான போட்டியாளர்கள் 2000 முதல் 3000 மட்டுமே.

உண்மையான போட்டியாளர்கள்

என்பவர்கள் சரியான திட்டமிடுதலுடன்,

தொடர்ச்சியாக பயிற்சி செய்பவர்களே..

ஜெகதீஸ்வரன் : *IAS தேர்வு என்பது மிகப்பெரும் கடல் போன்றது என்பது உண்மைதானா ?*

*தேர்விற்கு அதிக புத்தகங்கள் படிக்க வேண்டுமா ?*

பயிற்சியாளர் பதில் :இல்லை.

IAS தேர்வில் இடம்பெறும் வினாக்கள் அனைத்தும் தேர்வாணையத்தால் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே இருக்கும்.

அந்தப்பாடத்திட்டத்தின்படி தேர்வுக்கு தயார் செய்தாலே எளிதில் வெற்றி பெறலாம்.

ஐயப்பன் : *IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் எவ்வளவு காலம் படிக்க வேண்டும் ?*

பயிற்சியாளர் பதில் :முறையான வழிகாட்டுதல் இருந்தால் IAS முதல்நிலை தேர்விற்கு 3 மாத காலம் போதுமானது.

ராஜி : *IAS தேர்விற்கு எப்போதிலிருந்து தயாராக வேண்டும் ?*

பயிற்சியாளர் பதில் :IAS தேர்வு என்பது பொதுத் தேர்வல்ல.

அது ஓர் போட்டித் தேர்வு.

ஆகவே இன்றிலிருந்தே தயாராவது அவசியம்.

வித்யா *IAS தேர்வில் நகர்புற மாணவர்களே எளிதில் வெற்றி பெற முடியும். கிராமப்புற மாணவர்கள் வெற்றி பெறுவது கடினம் என்ற கருத்து உண்மைதானா ?*

பயிற்சியாளர் பதில் :முற்றிலும் தவறான கருத்து.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது எந்தப் பாகுபாடுமின்றி அனைத்துப் பகுதி மாணவர்களும் பங்குபெறும் வகையில் தான் வினாத்தாளை அமைக்கிறது.

அல்நிஸ்மா  பேகம் : *IAS தேர்விற்கு படிக்க வேண்டுமென்றால் டெல்லி மற்றும் முக்கிய நகரங்களுக்குச் சென்று பயிற்சி பெற வேண்டுமா ?*

பயிற்சியாளர் பதில் :இல்லை.

அப்படி எதுவும் இல்லை..

நீங்கள் வீட்டிலிருந்தே படித்து வெற்றி பெறலாம்.

அவ்வாறு வெற்றிபெற கீழ்வருபவை அனைத்தும் அவசியம்

தேர்வுமுறை பற்றி அறிந்து கொள்ளுதல்

வினா அமைப்பு முறை பற்றி அறிந்து கொள்ளுதல்

சரியான திட்டமிடல்

திட்டமிட்டதை தொடர்ச்சியாக செயல்படுத்துதல்

மாதிரித் தேர்வுகள் எழுதுதல்

சரியான வழிகாட்டல்

இறுதியாக முழு நம்பிக்கையோடு  இருத்தல்

இவை அனைத்தும் இருந்தால் நீங்களும்

ஒரு IAS, IPS அதிகாரி ஆவது நிச்சயம்..I

தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

இளைஞர்களுக்கு உற்சாகப் படுத்துங்கள்.

நமது ஊரில் IAS. IPS. போன்ற வேலைக்கு *நமது இளைய தலைமுறை ஆர்வம் கொள்ள செய்வோம்.