2.0 ஷங்கர் சென்னையில் ஒரு சண்டை காட்சிக்காக இவள்ளவு கோடி செலவா

சிறிய பட்ஜெட் படங்கள் தயாரிப்பாளர்கள் செய்யும் செலவு மொத்தமே 1 முதல் பத்து கோடி ருபாய் வரை தான் இருக்கும். ஆனால் அந்த அளவு பணத்தை ஷங்கர் ஒரு சண்டை காட்சிக்கு மட்டுமே செலவு செய்கிறாராம்.

சமீபத்தில் 2.0விற்கு சென்னையில் ஒரு சண்டை காட்சிக்காக மட்டும் ஒரு பிரத்யேக செட் அமைத்து படமாக்கினாராம். அதற்கான செலவு தான் பத்து கோடிக்கும் மேல் என்கிறார்கள்.

லைக்கா தயாரிக்கும் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 400 கோடிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் 2.0 இந்த வருடம் தீபாவளிக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like More from author