10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு முடியும்வரை சிறப்பு வகுப்பு

திருவண்ணாமலை, பிப். 22:

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதத்தை
அதிகரிக்கும் நோக்கத்தில் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு
எழுதவுள்ள மாணவர்களுக்கு பொது தேர்வுகள் முடியும் வரை சிறப்பு வகுப்புகள்
நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்தள்ளார் இதுகுறித்து அவர்
செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில், தி.மலை மாவட்டத்தில் மாணவர்களின்
தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் கல்வித் திறனில் பின்தங்கிய
மாணவர்கள் நடுத்தர மாணவர்கள் என தனித்தனியாக பிரித்து ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வகுப்புகள் வரும் 27ந் தேதி முதல் தொடங்கி பொதுத் தேர்வு முடியும் வரை
தொடர்ந்து நடைபெறவுள்ளது. இவ்வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்கள் இரவு
நேரத்திலும் பள்ளிகளிலேயே தங்கி படிப்பதற்கும் நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு ஆசிரியர்கள்
மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் சிறந்த ஆசிரியர்களால்
தயாரிக்கப்பட்டுள்ள வினா வங்கி புத்தகத்தைக் கொண்டும் வகுப்புகள்
நடத்துவார்கள். எனவே மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு
பயனடையலாம்.

You might also like More from author