10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, மே 18:

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மலை மாவட்ட ஆட்சியர்
அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின்
கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை  கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள்
மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கம் தமிழ்நாடு அரசு துறை
ஊர்தி ஓட்டுநர் சங்கம், ஆகிய சங்கங்கள் இணைந்து தமிழ்நாடு அரசு
அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த
கூட்டமைப்பின் சார்பில் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று
(புதன்கிழமை) மாலை 6 மணியளவில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர்
இரா.,செல்வபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அலுவலர்
உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்க மாவட்ட தலைவர்
ஆர்.வாசுமூர்த்தி, தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர் சங்க மாவட்ட
தலைவர் எஸ்.செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகிக்க, தமிழ்நாடு அரசு
அலுவலர் ஒன்றிய மாவட்ட செயலாளர் என்.மாசிலாமணி அனைவரையும் வரவேற்று
பேசினார். தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க
பி.சரவணன் சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊதிய முரண்பாட்டை
களைந்திட வேண்டும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய
திட்டத்தை அமுல்படுத்திட வேண்டும், 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்கிட
வேண்டும், 50 சதவீத அகவிலைப்படியினை அடிப்படை ஊதியத்தில் சேர்த்திட
வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை அரசே ஏற்று நடத்திட வேண்டும்,
தொகுப்பூதியத்தை ரத்து செய்ய  வேண்டும். தினக்கூலி ரத்து செய்ய வேண்டும்,
சிறப்பு கால முறை ஊதியத்தை ரத்து செய்ய வேண்டும் காலமுறை ஊதியத்தை
அமுல்படுத்த வேண்டும். காலி பணியிடத்தை நிரப்பிட வேண்டும் அனைத்து
துறைகளுக்கும் வாகன வசதி வழங்கிட வேண்டும் ஓட்டுநர் பதவியினை
வேலைவாய்ப்பு அலுவலகம மூலம் நியமனம் செய்ய வேண்டும் நிர்வாக தீர்ப்பாயம்
அமைத்திட வேண்டும் தொழில்வரியினை ரத்து செய்ய வேண்டும் என்பன பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்கள் எழுப்ப்பபட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட அரசு ஊழீயர்கள் கலந்து
கொண்டனர். முடிவில் திருவண்ணாமலை மாவட்ட அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்கள்
சங்க நிர்வாகி ஜி.ஏழுமலை நன்றி கூறினார்.

You might also like More from author