17 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த இந்தியாவின் இரும்பு பெண் பிரித்தானியாவை சேர்ந்த தனது காதலரை மணக்கவுள்ளார்

மணிப்பூரில் ராணுவ சிறப்பு சட்டத்தை நீக்க வலியுறுத்தி 17 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த இந்தியாவின் இரும்பு பெண் பிரித்தானியாவை சேர்ந்த தனது காதலரை மணக்கவுள்ளார்.

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் இரோம் சர்மிளா (45).

இரும்பு பெண்மணி இவர் மணிப்பூரில் ராணுவ சிறப்பு சட்டத்தை நீக்க வலியுறுத்தி 17 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

சமீபத்தில் நடைபெற்ற மணிப்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட சர்மிளா படுதோல்வியடைந்தார்.

இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக சர்மிளா பிரித்தானியாவை சேர்ந்த டெஸ்மெண்ட் கவுடின்கோ (54) என்னும் நபரை காதலித்து வந்தார்.

தற்போது அவரை திருமணம் செய்து கொள்ள சர்மிளா முடிவெடுத்துள்ளார்.

சமீபத்தில் பிரித்தானியா செல்வதற்காக சர்மிளா பாஸ்போர்டுக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.

ஆனால், சில காரணங்களால் அவருக்கு பாஸ்போர்ட் கிடைக்கவில்லை. இதனால், தனது திருமணத்தை கேரளாவில் நடத்த சர்மிளா முடிவெடுத்துள்ளார்.

இதற்காக டெஸ்மெண்ட் விரைவில் இந்தியா வரவுள்ளார்.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com