Home உலகம் உலகம் நீரில் மூழ்குமா..? சுனாமி அலை ஆபத்து 2000 அடி உயரத்திற்கு ஏற்பட வாய்ப்பு !

உலகம் நீரில் மூழ்குமா..? சுனாமி அலை ஆபத்து 2000 அடி உயரத்திற்கு ஏற்பட வாய்ப்பு !

15

எதிர்வரும் காலங்களில் உலகம் முழுவதும் ஏற்பட்ட சுனாமியை விடவும் பாரிய ஆபத்து ஒன்று ஏற்பட கூடும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீண்ட காலங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமியை விடவும் மெகா சுனாமி நிலை ஒன்று தொடர்பில் உலகம் அவதானத்தை செலுத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்

2004ஆம் ஆண்டு சுனாமியின் போது 100 அடி உயரமான சுனாமி அலைகள் சில பகுதிகளில் தாக்கத்தை செலுத்தியிருந்தன. 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது சில பகுதிகளில் 140 அடி உயரத்தில் சுனாமி அலைகள் தோன்றியிருந்தன.

எனினும் அந்த நிலைமை சாதாரணமானவைகள் எனவும், மெகா சுனாமி நிலை ஏற்பட்டால் 2000 அடி உயரம் வரையில் அலைகள் ஏற்பட கூடும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவ்வாறான நிலைமைகள் கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த சுனாமி நிலைமை கடலில் மாத்திரம் அல்ல பெரிய நதிகளில் ஏற்பட கூடும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.