Home உலகம் 2017ம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாக ஐரிஸ் மிட்டனேர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

2017ம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாக ஐரிஸ் மிட்டனேர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

31

2017ம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐரிஸ் மிட்டனேர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிலிப்பைன்சின் மணிலா நகரில் நடந்த பிரபஞ்ச அழகிக்கான போட்டியில் 88 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டிகளில் வெற்றி வாகை சூடி பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐரிஸ் மிட்டனேர் பிரபஞ்ச அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதில் இரண்டாவது இடத்தை ஹைதி நாட்டைச் சேர்ந்த 25 வயதான ராகுவல் பெலிசியரும், மூன்றாவது இடத்தை கொலம்பியாவின் 23 வயதான ஆண்ட்ரியா டோவரும் பெற்றனர்.

பல் மருத்துவ மாணவியான ஐரிஸ் லில்லி நகரை சேர்ந்தவராவர், இவர் ஏற்கனவே மிஸ் பிரான்ஸ் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.