2017-2018ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி நுண்ணீர்ப்பாசனத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நுண்ணீர்ப்பாசனத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பயிருக்குத் தேவையான அளவில் நீண்ட நேரம், மண்ணின் தன்மைக்கேற்பவும், பயிரின் வகைக்கேற்பவும், சொட்டுநீர், தெளிப்புநீர், மழைத்தூவான் போன்றவைகள் அமைத்திட நுண்ணீர்ப்பாசனத் திட்டம் வழி வகிக்கிறது.

பிரதம மந்திரி நுண்ணீர்ப்பாசனத் திட்டம் (Pநச னசழி அழசந ஊசழி) மூலம் விவசாயத்திற்கு குறைந்த நீரில் அதிக மகசூல் மற்றும் இலாபம் கிடைக்க வழிவகை செய்திடவும் 2017-2018ம் நிதியாண்டிற்கான நுண்ணீர்ப்பாசனத்திட்டத்திற்கு புதிய மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. விவசாய பெருமக்கள் தாங்களாகவே நுண்ணீர்ப்பாசனத் திட்டம் பெற இணையதளத்தில் பதிவு செய்யவும், அவர்களுக்கு விருப்பமான நுண்ணீர்பாசன நிறுவனங்களை தேர்வு செய்து கொள்ளவும், அவற்றின் விலை விபரங்களையும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும் முடியும். விவசாயிகள் தங்களது விண்ணப்பம் எந்நிலையில் உள்ளது என்பதை கண்காணிக்கவும் வசதி உள்ளது.

இப்புதிய முறையில் நுண்ணீர்ப்பாசனத் திட்டத்தில் விண்ணப்பம் பரிசீலனை முதல் மானியம் பெறுவது முடிய ஒவ்வொரு நிலைக்கும் காலக்கெடு இருப்பதால் விவசாயிகளுக்கு நேர விரையமும், வீண் அலைச்சலும் தவிர்க்கப்படும். நுண்ணீர்ப்பாசனத் திட்டத்தில் 2014-2015 முதல் 2016-2017 வரை சிறப்பினத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி செலவிடப்படாமல் இருப்பதால் இந்த திட்டத்தை சிறப்பினத்தில் உள்ள தகுதியான ஆதிதிராவிட விவசாயிகள் அனைவரும் பயன்பெறலாம்.

நுண்ணீர்ப்பாசன திட்டத்திற்கு விண்ணப்பிக்க விவசாயியின் புகைப்படம், நிலத்தின் சிட்டா, அடங்கல், நில அளவீட்டு புத்தகம்(நில வரைப்படம்), கிணறு மற்றும் போர்வெல்லுக்கான ஆவணம், குத்தகை நிலத்திற்கான ஆவணம்(10 ஆண்டுகள் வரை), குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல், மண் மற்றும் நீர் பரிசோதனை அறிக்கை, சிறு,குறு விவசாயி சான்றிதழ் ஆகிய சான்றிதழ்கள் இருக்க வேண்டும்.

2017-2018ம் ஆண்டு செயல்படுத்த இருக்கும் நுண்ணீர்ப்பாசனத்திட்டம் வெளிப்படை தன்மையுடன் இருப்பதால் திருச்சிராப்பள்ளி மாவட்ட விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தினை வnhழசவiஉரடவரசந.வn.பழஎ.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திiiயோ அல்லது மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தொலைபேசி 80120 67145 என்ற எண்ணிலோ, மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் தொலைபேசி 94864 95788 எண்ணிலோ தொடர்புக் கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பிரதம மந்திரி நுண்ணீர்ப்பாசனத் திட்டத்தில் பாசன வசதியுள்ள அனைத்து விவசாயிகளும் தமிழக அரசு வழங்கும் கூடுதல் நிதி உதவி பெற்று பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

You might also like More from author