21 பிடிஒக்கள் அதிரடி மாற்றம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே உத்தரவு

திருவண்ணாமலை, மே 6:

திருவண்ணாமலையில் ஊரக வளர்ச்சித்துறையில்
பணிபுரிந்து வந்த 21 பிடிஒக்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவினை ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே
வெளியிட்டள்ளனர். ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம் (ஊராட்சிகள்)
பணிபுரிந்துவந்த வி.புருஷோத்தமன், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய
ஆணையராகவும் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர் டி.கே.லட்சுமி
நரசிம்மன் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சி) அலுவலகத்திற்கும்
பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பி.அமாவாசை , திருவண்ணாமலை ஊராட்சி
ஒன்றிய தனி அலுவலராகவும், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையர்
பி.காந்திமதி செய்யாறு ஊராட்சி ஒன்றிய ஆணையராகவும் , துரிஞ்சாபுரம்
ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர் ஆர்.ஞானசேகரன் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய
ஆணையர்கவும், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல மாவட்டம் முழுவதும்
21 பிடிக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம்
செய்யப்படடுள்ள அனைவரும் உடனடியாக பணியில் சேர்ந்து அதற்கான அறிக்கையினை
தெரிவிக்க வேண்டுமென ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டுள்ளார்.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com