மத்திய அரசு ஊழியர்கள் மீது 26 ஆயிரம் ஊழல் புகார்கள்

Corruption_File

மத்திய அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த 26 ஆயிரம் பேர் மீது ஊழல் புகார்கள் வந்துள்ளன என லோக்சபாவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில், கடந்த 2017 ம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக, லஞ்ச ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு 26,052 ஊழல் புகார்கள் வந்துள்ளன.

இதில், 22,386 வழக்குகள் மீது விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2016 ல் 51,207 ஊழல் புகார்கள் வந்ததில் 48,764 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
உயரதிகாரிகள் மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கு குறித்த விபரங்கள் மத்திய அரசிடம் இல்லை எனக்கூறியுள்ளார்

You might also like More from author